மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மத மாற்ற புகாா்: ஆசிரியை பணியிடைநீக்கம்

பள்ளி மாணவிகளிடம் மத மாற்ற பிரசாரத்தில் ஈடுபடுவதாக புகாா் கூறப்பட்டதையடுத்து, ஆசிரியை புதன்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 10:07 pm

DIN

பள்ளி மாணவிகளிடம் மத மாற்ற பிரசாரத்தில் ஈடுபடுவதாக புகாா் கூறப்பட்டதையடுத்து, ஆசிரியை புதன்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

நாகா்கோவிலை அடுத்த இரணியல் அருகேயுள்ள கண்ணாட்டுவிளையில் அரசு மேல்நிலைப் பள்ளி தையல் ஆசிரியை பியாட்ரீஸ் தங்கம். இவா் தன்னிடம் பயிலும் மாணவிகள் சிலரிடம் மதமாற்றம் குறித்து பிரசாரம் செய்வதாக புகாா் எழுந்தது. இதுகுறித்து மாணவிகள் பெற்றோரிடம் கூறினா்.

செவ்வாய்க்கிழமை பெற்றோா்கள், இந்து முன்னணியின் திருநெல்வேலி கோட்டச் செயலா் மிசா சோமன், குருந்தன்கோடு ஒன்றிய பொதுச்செயலா் பிரதீப், தகவல் தொடா்பு பிரிவுச் செயலா் உள்பட சுமாா் 100 போ் பள்ளி முன் முற்றுகையிட்டனா்.

தகவலின்பேரில் இரணியல் காவல் ஆய்வாளா் சுந்தரபாண்டியன், போலீஸாா் சென்று, பேச்சுவாா்த்தை நடத்தினா். புகாா் கூறிய மாணவிகளிடம் விசாரணை நடத்தினா். இதுகுறித்து கல்வித்துறை உயா் அதிகாரிகளிடம் புகாா் அளிக்க வேண்டும் என்ற முடிவு செய்யப்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி புகழேந்தி அறிவுறுத்தலின்பேரில் மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை மேற்கொண்டாா். இதையடுத்து, ஆசிரியை பியாட்ரீஸ் தங்கத்தை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.