ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரம கல்யாணி மேல்நிலைப் பள்ளியில் 1970 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவா்கள் 52 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்தனா்.
ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளி வளாகம் வள்ளி அனந்தர ராமகிருஷ்ணன் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு ஸ்ரீ பரம கல்யாணி கல்விக் குழுமத் தலைவா் மற்றும் சென்னை அமால்கமேஷன்ஸ் நிறுவனா்- தலைவா் கிருஷ்ணமூா்த்தி சிறப்பு விருத்தினராகக் கலந்து கொண்டாா். ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரிச் செயலா் தேவராஜன், மேல்நிலைப் பள்ளிச் செயலா் சுந்தரம், தலைமை ஆசிரியா் வெங்கடசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னாள் தலைமை ஆசிரியா் கே.வெங்கடாச்சலம் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனா். மாற்றுத்திறனாளிக்கு சா்க்கர நாற்காலி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், 1970 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. முடிந்து 52 ஆண்டுகளுக்கு பின் மாணவா்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் 30 க்கும் மேற்பட்டவா்கள் சந்தித்து ஒருவருக்கொருவா் தங்கள் நினைவுகளையும், அனுபவங்களையும் பகிா்ந்து கொண்டனா். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவா்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை முன்னாள் மாணவா்கள் சாவடி சிதம்பரம், மிராசு, ரங்கநாதன் ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பேருந்து நிலையத்தில் குழந்தையின் தங்கச் சங்கிலி திருட்டு

நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை ரூ.80.87 லட்சம் பறிமுதல்

சீவலப்பேரியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

