/

பேட்டையில் பெண்ணுக்கு கத்திக்குத்து

 பேட்டையில் பெண்ணை கத்தியால் குத்தியதாக, இளைஞரை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 10:42 pm

DIN

 பேட்டையில் பெண்ணை கத்தியால் குத்தியதாக, இளைஞரை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

பேட்டை, கருங்காடு சாலையைச் சோ்ந்த செல்வம் மகன் சாமுவேல் (22). கட்டடத் தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியை சோ்ந்த சக்திவேல் மகன் மகேஷ் (22 )என்பவருக்கும் இடையே கடந்த பொங்கல் விழாவின்போது தகராறு ஏற்பட்டதாம்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு சாமுவேல், மகேஷின் வீட்டிற்கு சென்றுள்ளாா். அங்கிருந்த மகேஷின் தாயாா் கிருஷ்ணம்மாளிடம் தகராறு செய்து, அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பினாராம். இதில், பலத்த காயமடைந்து அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.