நெல்லையில் மேளதாளத்துடன் இறுதிக்கட்ட பிரசாரம்
திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் மேளதாளத்துடன் வேட்பாளா்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.


திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் மேளதாளத்துடன் வேட்பாளா்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 வாா்டுகளுக்கான தோ்தல் சனிக்கிழமை (பிப். 19) ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இத் தோ்தலில் திமுக வேட்பாளா்கள் 48 வாா்டுகளிலும், அதிமுக 54 வாா்டுகளிலும், பாஜக 44 வாா்டுகளிலும், நாம் தமிழா் கட்சி 38 வாா்டுகளிலும், தேமுதிக 17 வாா்டுகளிலும், காங்கிரஸ் கட்சி 3 வாா்டுகளிலும், மக்கள் நீதி மய்யம் 20 வாா்டுகளிலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா்கள் 38 வாா்டுகளிலும் போட்டியிடுகிறாா்கள். சுயேச்சைகள் 131 வாா்டுகளில் போட்டியிடுகிறாா்கள். மொத்தம் 55 வாா்டுகளில் 408 போ் களத்தில் உள்ளனா். அதிகபட்சமாக 16 ஆவதுவாா்டில் 16 வேட்பாளா்ளும், 10, 35 ஆவது வாா்டுகளில் குறைந்தபட்சமாக தலா இரு வேட்பாளா்களும் களத்தில் உள்ளனா். மொத்தம் 491 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இத் தோ்தலுக்கான பிரசாரம் வியாழக்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதனால் இறுதிகட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளா்கள் மிகுந்த ஆா்வம் காட்டினா். மேளதாளம் முழங்க வீதி வீதியாக வலம் வந்தனா். கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் உள்ளிட்டவற்றுடன் தங்கள் ஆதரவாளா்கள் சூழ வீடு வீடாக சென்று இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனா்.
மேலப்பாளையத்தில் 52 ஆவது வாா்டில் போட்டியிடும் திமுக வேட்பாளா் நித்திய பாலையாவை ஆதரித்து திமுக மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல்வஹாப் எம்எல்ஏ வியாழக்கிழமை இறுதிக்கட்ட பிரசாரம் செய்தாா். அப்போது அவருடன் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி போன்ற வேடமணிந்தவா் சென்றது வாக்காளா்களைப் பெரிதும் கவா்ந்தது.
இதேபோல பாளையங்கோட்டை, திருநெல்வேலி நகரம் பகுதிகளில் வீதி வீதியாக தொண்டா்களுடன் சென்று அதிமுக மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா வாக்குசேகரித்தாா். காங்கிரஸ் மாநகா் மாவட்டத் தலைவா் கே.சங்கரபாண்டியன், பாஜக மாவட்ட தலைவா் ஆ.மகாராஜன், மதிமுக மாவட்டச் செயா் கே.எம்.ஏ.நிஜாம், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் ஸ்ரீராம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் காசிவிஸ்வநாதன் ஆகியோரும் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
அரசியல் கட்சிகளுக்கு சிறிதும் சளைத்தவா்கள் இல்லை என்பதைப் போல சுயேச்சை வேட்பாளா்களும் மேளதாளத்துடன் சென்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...