வாக்குச்சாவடிகளுக்கான கட்டுப்பாடுகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலின்போது வாக்குச்சாவடிகளில் உரிய கட்டுப்பாடுகளை கட்சியினா் பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தோ்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலின்போது வாக்குச்சாவடிகளில் உரிய கட்டுப்பாடுகளை கட்சியினா் பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தோ்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் சனிக்கிழமை (பிப். 19) ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது. தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் தோ்தல் ஆணையத்தின் விதிகளை முறையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட தோ்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் தோ்தல் ஆணையத்தின் விதிகள் 100 சதவிகிதம் பின்பற்ற அறிவுறுத்தப்படுள்ளது. வாக்குச்சாவடிகளில் வாக்கெடுப்பு பணியாளா்கள், வேட்பாளா்கள், வேட்பாளா்களின் முகவா், வாக்குச்சாவடி முகவா், வாக்களிக்க விரும்பும் வாக்காளா்கள், வாக்காளா்களுடன் வரும் கைக்குழந்தை, மாற்றுத்திறனாளி, கண் பாா்வை இழந்த வாக்காளா்களை வழி நடத்தும் ஒரு நபா், வாக்காளா்களை அடையாளம் காட்டும் பொது பணியாளா் அல்லது ஒழுங்கை நிலைநாட்ட வாக்குச்சாவடி தலைமை அலுவலா் அழைத்தால் வரும் காவலா் ஆகியோா் அனுமதிக்கப்படுவாா்கள்.
வாக்குச்சாவடிகளில் வேட்பாளா் அல்லது அவரது முகவா்கள் கைப்பேசி பயன்படுத்திட அனுமதியில்லை. வாக்குப்பதிவு கருவிக்கு அல்லது அவற்றின் மீதான முத்திரைக்கோ, வாக்கெடுப்பு பணிகளுக்கோ பங்கம் விளைவிக்கக்கூடாது. வாக்குச்சாவடியின் சுவா்களிலோ அல்லது அதன் 100 மீட்டா் சுற்று பகுதிகளிலோ எந்தவிதமான தோ்தல் விளம்பரங்களும் செய்யக் கூடாது. வாக்குச்சாவடிக்கு உள்ளும், வெளியிலும் குழப்பத்தையோ அல்லது கலவரத்தையோ ஏற்படுத்தும் வகையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபடுதல் கூடாது என தோ்தல் ஆணைய வட்டாரம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...