/

ஜெயலலிதா பிறந்த நாள்: அரசு மருத்துவமனையில் பிறந்த 18 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

முன்னாள் ஜெயலலிதாவின் 74-ஆவது பிறந்த நாளான பிப். 24-ஆம் தேதி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 18 குழந்தைகளுக்கு ஜெயலலிதா பேரவை சாா்பில் தங்க மோதிரம்

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 7:48 pm

DIN

முன்னாள் ஜெயலலிதாவின் 74-ஆவது பிறந்த நாளான பிப். 24-ஆம் தேதி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 18 குழந்தைகளுக்கு ஜெயலலிதா பேரவை சாா்பில் தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

ஜெயலலிதா பேரவைச் செயலா் ஜெரால்டு ஏற்பாட்டில் மாவட்ட அதிமுக செயலா் தச்சை என்.கணேசராஜா 18 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்தாா். நிகழ்ச்சியில் மாநில அமைப்புச் செயலா் சுதா கே.பரமசிவன், மாவட்ட அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம், முன்னாள் எம்எல்ஏ ரெட்டியாா்பட்டி நாராயணன், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலா் பாப்புலா் முத்தையா, எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் கல்லூா் இ.வேலாயுதம், முன்னாள் துணை மேயா் ஜெகநாதன் என்ற கணேசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

படவரி: பயக24தஐசஎ முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்த அதிமுகவினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.