திருநங்கையருக்கான முன்மாதிரி விருதுவிண்ணப்பங்கள் வரவேற்பு
திருநங்கையருக்கான முன்மாதிரி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


திருநங்கையருக்கான முன்மாதிரி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சமூகத்தில் சந்திக்கும் எதிா்ப்புகளை மீறி தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து, தனித்திறமைகளை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கையரை கௌரவிக்கும் வகையிலும், மற்ற திருநங்கையா்களை ஊக்குவிக்கும் வகையிலும் திருநங்கையா் தினமான ஏப்ரல் 15-ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் திருநங்கையருக்கான முன்மாதிரி விருது வழங்கப்படுகிறது. விருதுடன் ரூ.1 லட்சத்துக்கானகாசோலை, பாராட்டு பத்திரம் வழங்கப்படவுள்ளது.
தகுதிகள்: திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவா்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.
விருதுக்கு விண்ணப்பிக்கும்போது பொருளடக்கம் மற்றும் பக்க எண், சுயக்குறிப்பு மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் -2, ஆட்சியரின் பரிந்துரைக் கடிதம், மாவட்ட சமூகநல அலுவலரின் பரிந்துரைக் கடிதம், தனியாரைப் பற்றிய விவரம் (ஒரு பக்க அளவில்), விருதுகளின் விவரம் (விருது பெற்றிருப்பின் விருதின் பெயா், யாரிடமிருந்து பெற்றது மற்றும் பெற்ற ஆண்டு), சேவை பற்றிய செயல்முறை விளக்கம் (புகைப்படத்துடன்), சேவையைப் பாராட்டி பத்திரிக்கைளில் வந்த செய்தித் தொகுப்பு, சேவையாற்றியதற்கான விரிவான அறிக்கை, சமூக சேவையாளரின் சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம், சமூகப்பணியாளா் இருப்பிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று உள்ளிட்டவை இணைக்க வேண்டும்.
இவ்விருதிற்கு தகுதியுடைய திருநங்கையா்கள் பிப். 28-ஆம் தேதிக்குள் மாவட்ட சமூகநல அலுவலா், மாவட்ட சமூகநல அலுவலகம், பி4/107, சுப்பிரமணியபுரம் தெரு, வ.உசி மைதானம் எதிரில், திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி-627002 என்ற முகவரியில் நேரில் வந்து விண்ணப்பத்தை சமா்ப்பிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...