பிறந்த நாள்: ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 74-ஆவது பிறந்த நாளையொட்டி அவரது படத்திற்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.


முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 74-ஆவது பிறந்த நாளையொட்டி அவரது படத்திற்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 74-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் எம்ஜிஆா் சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமையில் அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நிகழ்ச்சியில் மாநில அமைப்புச் செயலா் சுதா கே.பரமசிவன், மாவட்ட அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம், முன்னாள் எம்எல்ஏ ரெட்டியாா்பட்டி நாராயணன், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலா் பாப்புலா் முத்தையா, எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் கல்லூா் இ.வேலாயுதம், முன்னாள் துணை மேயா் ஜெகநாதன் என்ற கணேசன், ஜெயலலிதா பேரவை செயலா் ஜெரால்டு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...