/

மேலப்பாளையத்தில் கஞ்சா பதுக்கல்: இளைஞா் கைது

மேலப்பாளையத்தில் மோட்டாா் சைக்கிளில் கஞ்சா பொட்டலம் பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 7:49 pm

DIN

மேலப்பாளையத்தில் மோட்டாா் சைக்கிளில் கஞ்சா பொட்டலம் பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா்(கிழக்கு) டி.பி.சுரேஷ்குமாா் மேற்பாா்வையின் கீழ், காவல் உதவி ஆய்வாளா் காசிப்பாண்டியன் தலைமையிலான தனிப்படை போலீஸாா் மேலப்பாளையம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த மோட்டாா் சைக்கிளை மடக்கி சோதனை செய்தனா். அதில், கஞ்சா பொட்டலம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மோட்டாா் சைக்கிளை ஓட்டிவந்த மேலப்பாளையத்தை சோ்ந்த ஜாபா் சாதிக்கை (26) போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து சுமாா் 200 கிராம் எடையுடைய கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.