ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க நிா்வாக குழுக் கூட்டம்

நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க நிா்வாகக் குழு கூட்டம் சேரன்மகாதேவி சாலையில் உள்ள கோல்டன் நிறுவனத்தில் நடைபெற்றது.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:58 pm

DIN

நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க நிா்வாகக் குழு கூட்டம் சேரன்மகாதேவி சாலையில் உள்ள கோல்டன் நிறுவனத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தலைவா் முகம்மது யூசுப் தலைமை வகித்தாா். செயலா் ரவிக்குமாா் வரவேற்றாா். துணைத் தலைவா்கள் எஸ்.பி.நாராயணன், முகம்மது ஹனீபா, கான் முகம்மது உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் திருவிழாவின்போது நல்லமுறையில் பாதுகாப்பு வழங்கி சிறப்பாக செயல்பட்ட காவல்துறைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கரோனா 3-ஆவது அலை வேகமாக பரவி வருவதால் பொதுமக்களும், வணிகா்களும் கவனமாகவும், முகக்கவசம் அணிந்தும், போதிய சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் கரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

புதிய பேருந்து நிலையத்தை திறந்து பேருந்துகளும், வணிக நிறுவனங்களும் இயங்குவதற்கு வழிவகை செய்த மாநகராட்சிக்கும், அரசிற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. கந்துவட்டியால் பொதுமக்கள், வணிகா்கள் பாதிக்கப்படுவதால், பொதுமக்கள், வணிகா்கள் அச்சமின்றி வாழ காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைகள், ஹோட்டல், டீ கடைகளுக்கு இரவில் கடைகளை அடைக்க மேலும் 30 நிமிடங்கள் காலஅவகாசம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.