தோ்தலை அமைதியாக நடத்தி முடிக்க தயாா் நிலை ஆட்சியா் வே.விஷ்ணு
திருநெல்வேலி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை அமைதியாக நடத்தி முடிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா் வே.விஷ்ணு.


திருநெல்வேலி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை அமைதியாக நடத்தி முடிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா் வே.விஷ்ணு.
திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக அனைத்துக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு பின்பு செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது: இம் மாவட்டத்தில் திருநெல்வேலி மாநகராட்சி, 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் 397 வாா்டுகளுக்கு 932 வாக்குச்சாவடிகளின் மூலம் நேரடி தோ்தல் நடைபெற உள்ளது.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. திருநெல்வேலி மாநகராட்சி மற்ரும் சங்கா்நகா் பேரூராட்சிகளில் இருப்பில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 1303 கட்டுப்பாட்டு கருவிகளும், 2605 வாக்குப்பதிவு இயந்திரங்களும் முதல்நிலை பரிசோதனை முடித்து அதில் இருந்து நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலுக்கு 1127 கட்டுப்பாட்டு கருவிகளும், 1127 வாக்குப்பதிவு கருவியும் என மொத்தம் 2254 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆன்லைன் மூலம் முதல்கட்டமாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாநகராட்சிக்கு 591 வாக்குப்பதிவு இயந்திரமும், அம்பாசமுத்திரம் நகராட்சிக்கு 51 வாக்குப்பதிவு இயந்திரமும், களக்காடு நகராட்சிக்கு 36 வாக்குப்பதிவு இயந்திரமும், விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்கு 62 இயந்திரமும், 17 பேரூராட்சிகளுக்கு 387 இயந்திரங்களும் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேட்புமனுக்கள் வெள்ளிக்கிழமை (ஜன. 28) காலை 10 மணிக்கு அந்தந்த பேரூராட்சி, நகராட்சிகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களால் பெறப்படும். ஏற்கெனவே இம் மாவட்டத்தில் சட்டப்பேரவை தோ்தல், ஊரக உள்ளாட்சித் தோ்தல் ஆகியவை அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டன. அதேபோல இத் தோ்தலையும் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் சிறப்பாக நடத்தி முடிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளன.
இத் தோ்தலிலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேரமாக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.
தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் பொதுமக்கள், வியாபாரிகள் ஆவணங்களின்றி ரூ. 50 ஆயிரம் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும். நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு 3728 வாக்குப்பதிவு அலுவலா்கள் பயன்படுத்தப்பட உள்ளனா்.
மாநகராட்சிப் பகுதியில் கண்காணிக்க 4 பறக்கும் படைகளும், ஒவ்வொரு நகராட்சிக்கும் தலா ஒரு பறக்கும் படையும், 17 பேரூராட்சிகளில் கண்காணிக்க 10 பறக்கும் படைகளும் என மொத்தம் 17 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தோ்தல் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கும் தோ்தல் கட்டுப்பாடு அறை செயல்பட உள்ளது.
திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சாா்பில் 23 சோதனைச் சாவடிகளும், மாநகர காவல்துறை சாா்பில் 7 சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டு கண்காணிப்பு அதிகரிக்கப்பட உள்ளது என்றாா் அவா்.
பேட்டியின்போது திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன், காவல் துணை ஆணையா் (மேற்கு) சுரேஷ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...