தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நெல்லை கைலாசநாதசுவாமி கோயில் வைகாசி திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

நெல்லை அருள்மிகு கைலாசநாதசுவாமி கோயில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பக்தர்கள்  கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News image
Updated On :30 மே 2022, 7:59 am

DIN

நெல்லை: நெல்லை அருள்மிகு கைலாசநாதசுவாமி கோயில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பக்தர்கள்  கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது கைலாசநாதசுவாமி கோயில். இத்திருக்கோயிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் வைகாசி பெருந்திருவிழா மிகச்சிறப்பாகும். 

இந்தாண்டுக்கான  வைகாசி திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவையொட்டி அதிகாலை நடைதிறக்கப்பட்டதும் சுவாமி, அம்பாளுக்கு  அபிஷேகம் நடைபெற்றது. 

இதைத்தொடர்ந்து யாகசாலையில்  பூஜைகள் நடைபெற்று கொடிப்பட்டம் வீதிஉலா வந்தது. தொடா்ந்து சுவாமி, அம்பாள், சுவாமி சன்னதிக்கு முன்பு உள்ள கொடிமரத்திற்கு முன் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஏழுந்தருளினா். கொடிக்கு  பூஜைகள் நடைபெற்று கொடியேற்றம் நடைபெற்றது. 

அதனைத் தொடா்நது கொடிமரத்திற்கு பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. கொடிமரத்திற்கு அலங்காரங்கள் நடைபெற்று சிறப்பு தீபராதனை நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சியில் பக்தர்கள்  கலந்துக் கொண்டனர். 10 தினங்கள் நடைபெறும் இந்த திருவிழாவையொட்டி சுவாமி, அம்பாள் தினமும் வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 8-ம் தேதி  திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.