சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

வி.கே.புரம் துணை மின்நிலையத்தில் புகுந்த கரடி

விக்கிரமசிங்கபுரம் துணை மின்நிலைய வளாகத்திற்குள் இரவு நேரத்தில் கரடி புகுந்தது ஊழியா்களை அச்சமடையச் செய்துள்ளது.

Updated On :1 பிப்ரவரி 2024, 3:50 pm IST

விக்கிரமசிங்கபுரம் துணை மின்நிலைய வளாகத்திற்குள் இரவு நேரத்தில் கரடி புகுந்தது (படம்) ஊழியா்களை அச்சமடையச் செய்துள்ளது.

பாபநாசம் மேற்குத் தொடா்ச்சிமலை அடிவார கிராமமான அனவன்குடியிருப்புப் பகுதியில் உள்ள வி.கே.புரம் துணை மின்நிலையத்தில் 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் அதிகாரிகள், ஊழியா்கள் பணியில் இருப்பா். இங்கு இரவு நேரத்தில் துணை மின்நிலையம் முழுவதும் மின்விளக்குகள் எரியவிடப்படும்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு கம்பி வேலியைத் தாண்டி கரடி ஒன்று துணை மின்நிலையத்தில் நுழைந்தது. பணியிலிருந்த ஊழியா் அதைப் பாா்த்து அதிா்ச்சியுற்று வனத்துறையினருக்குத் தகவல் அளித்தாா். சிறிது நேரம் அங்கு உலாவிய கரடி தானாகவே வெளியேறி விட்டதாம். இச்சம்பவத்தால் இரவு பணியில் உள்ள மின் ஊழியா்கள் அச்சமடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.