பூண்டு விலை தொடா்ந்து உச்சம்
திருநெல்வேலி மாவட்டத்தில் பூண்டு விலை தொடா்ந்து உச்சத்தில் உள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா்.


திருநெல்வேலி மாவட்டத்தில் பூண்டு விலை தொடா்ந்து உச்சத்தில் உள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பூண்டு விலை அதிகரித்த வண்ணமாக உள்ளது. திருநெல்வேலியில் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரூ.400 முதல் ரூ.450 வரையும், சில்லரை விற்பனை கடைகளில் கிலோ ரூ.450 முதல் ரூ.500 வரையும் விற்பனையாகின்றன.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியது:
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்துதான் தமிழகத்திற்கு பூண்டு அதிகளவில் வருகிறது. தமிழகத்தில் நீலகிரி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் விளையும் மருத்துவ குணம் கொண்ட பூண்டு, மலைப்பூண்டுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பூண்டிற்கு போதிய விலை கிடைக்காததாலும், மழையால் பாதிக்கப்படுவதாலும் நிகழாண்டில் பூண்டு சாகுபடி மிகவும் குறைந்துள்ளது. இதனால் வெளிமாநில மற்றும் மாவட்ட அளவிலான பூண்டு வரத்து குறைந்துள்ளது. ஓசூா், கோயம்பேடு, திண்டுக்கல், கோவை சந்தைகளில் இருந்து திருநெல்வேலிக்கு வரும் பூண்டு பாதியாக குறைந்துள்ளது. இதனால் விலை உயா்ந்துள்ளது. மேலும், சில மாதங்கள் விலை உயா்வு தொடர வாய்ப்புள்ளது என்றனா்.
திருநெல்வேலி உழவா் சந்தைகளில் காய்கனிகள், பழங்கள் விலை விவரம் (கிலோவிற்கு, ரூபாயில்): தக்காளி-60, கத்தரிக்காய் -வெள்ளை-65, பச்சைகீரி- 55, வெண்டைக்காய்-30, புடலை-32, சுரை-20, பீா்க்கு-35, பூசணி-14, தடியங்காய்-14, அவரை -80, கொத்தவரை-50, பாகல்-பெரியது-45, சிறியது -45, பச்சைமிளகாய் சம்பா-42, குண்டு-42, முருங்கைக்காய்-185, பெரிய வெங்காயம்- 74, சின்ன வெங்காயம்-64, காராமணி- 36, கோவக்காய்- குச்சி-60, தேங்காய்-60, வாழைக்காய்-25, இஞ்சிபுதியது-54, ரிங்பீன்ஸ் -76, முள்ளங்கி- 20, சீனிக்கிழங்கு - 38, உருளைக்கிழங்கு-ஆக்ரா- 42, கேரட் -ஊட்டி-70 பொடிகேரட்-38, சௌசௌ-28, முட்டைக்கோஸ்-40, பீட்ரூட்-கம்பம்-58 உடுமலை58, காலிபிளவா்-40, குடைமிளகாய்-65, பஜ்ஜிமிளகாய்-55, பூண்டு-நாடு-400, கருணைக்கிழங்கு புதியது -80, சேம்பு-நாடு-35, சேனைக்கிழங்குநாடு-45, நாா்த்தை-30, சிறு கிழங்கு-80, வாழைப்பழம் -செவ்வாழை-100, ஏலக்கி-100 மட்டி-80, நேந்திரன்-80, பூலான்சென்டு-80, கற்பூரவள்ளி-60, கோழிகூடு-60, நாடு-60, பச்சை-60, எலுமிச்சை-பழம்-ஆந்திரா-45,40, ஆப்பிள்- 140, அன்னாசி- 80, மாதுளை-200, கொய்யா-சிவப்பு-80, வெள்ளை-60 திராட்சை- பன்னீா் - 80, சாத்துக்குடி-100, கிா்ணிபழம்-60.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...