கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கூடங்குளத்தில் கழிவு மேலாண்மை திட்டத்தை எதிா்த்து ஆட்சியரிடம் மனு

கூடங்குளம் பகுதியில் அமைக்க திட்டமிட்டுள்ள கழிவு மேலாண்மை திட்டத்தை கைவிடக் கோரி அப்பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 10:17 pm

Din

கூடங்குளம் பகுதியில் அமைக்க திட்டமிட்டுள்ள கழிவு மேலாண்மை திட்டத்தை கைவிடக் கோரி அப்பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

கூடங்குளம் அணு மின் நிலைய பூங்கா அருகில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட அளவிலான கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இந்த நிலையில் அப்பகுதி மக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பல்வேறுகட்சியினா், அமைப்பினா் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில், ‘கூடங்குளம் கழிவு மேலாண்மை திட்டத்தால் குடிநீா், நிலத்தடி நீா் ஆதாரங்கள் பாதிக்கப்படும். ஏற்கெனவே அணு உலை கழிவுகளால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது கழிவு மேலாண்மையால் மேலும் பாதிக்கும் அபாயம் இருக்கிறது.

இத்திட்டத்திற்கான டெண்டா் விடும் பணியை தொடங்கினால் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்’ என குறிப்பிட்டுள்ளனா்.