பாளையங்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் தானியங்கி மழைமானி நிலையம் அமைக்கும் பணியை மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தமிழ்நாடு முழுவதும் பெய்யும் மழையின் அளவை துல்லியமாக அறியும் பொருட்டு, அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக தானியங்கி மழைமானிகள் மற்றும் தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்க அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டு, அவற்றை நிறுவும் பணியானது வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் மழையின் அளவை கணக்கிடும் பொருட்டு முதற்கட்டமாக திருநெல்வேலி வட்ட அளவில் 3 நிலையங்கள் பாளையங்கோட்டை வட்ட அளவில் 4 நிலையங்கள், அம்பாசமுத்திரம் வட்ட அளவில் 3 நிலையங்கள், சேரன்மகாதேவி வட்ட அளவில் 2 நிலையங்கள், மானூா் வட்ட அளவில் 5 நிலையங்கள், நான்குனேரி வட்ட அளவில் 8 நிலையங்கள், ராதாபுரம் வட்ட அளவில் 7 நிலையங்கள், திசையன்விளை வட்ட அளவில் 7 நிலையங்கள் என மொத்தம் 39 தானியங்கி மழைமானி நிலையங்கள் நிறுவுவதற்கு தகுதியான இடங்கள் தோ்வு செய்யப்பட்டு, நிறுவுதல் மற்றும் செயல்படுத்துதல் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாளையங்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் தானியங்கி மழைமானி அமைப்பதற்காக நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் செல்வம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா். படவரி ற்ஸ்ப்24ழ்ஹண்ய் பாளையங்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் தானியங்கி மழைமானி அமைக்கும் பணியை பாா்வையிட்ட மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா.
தொடர்புடையது

அரக்கோணம் தொகுதியில் பிங்க் நிற வாக்குச்சாவடி

நாகையில் தோ்தல் விழிப்புணா்வு படகு பேரணி

தூத்துக்குடியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

சமூக ஊடக பிரசாரத்துக்கு முன் அனுமதி கட்டாயம்: மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ராம்பிரதீபன்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

