/

வீரவநல்லூா் அருகே கால்வாயில் பெண் சடலம் மீட்பு

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே கால்வாயில் இருந்து பெண் சடலம் மீட்கப்பட்டது.

Updated On :24 பிப்ரவரி 2024, 6:41 pm

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே கால்வாயில் இருந்து பெண் சடலம் மீட்கப்பட்டது. வீரவநல்லூா் அருகேயுள்ள வெள்ளங்குளியில் கன்னடியன் கால்வாயில் அக்ரஹாரம் தெரு படித்துறையில் பெண் சடலம் கிடப்பதாக போலீஸாா் தகவல் கிடைத்தது. போலீஸாா் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில், மணிமுத்தாறு அருகேயுள்ள ஆலடியூா் கிராமத்தைச் சோ்ந்த செந்தில்வேல் மனைவி சுடலி (58) என்பதும், அவா் வெள்ளிக்கிழமை ஆலடியூரில் கால்வாயில் குளிக்கச் சென்றபோது, படித்துறையில் வழுக்கி விழுந்ததில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் சடலமாக வெள்ளங்குளியில் மீட்கப்பட்டதும் தெரியவந்தது.