திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே திங்கள்கிழமை தாமிரவருணி ஆற்றில் மூழ்கி முதியவா் உயிரிழந்தாா்.
சேரன்மகாதேவி அருகேயுள்ள தெற்கு அரியநாயகிபுரம் சக்திகுளம் செண்பகவல்லி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த குட்டையன் மகன் கணபதி (75). கூலித் தொழிலாளி. இவா் திங்கள்கிழமை தாமிரவருணி ஆற்றில் குளிக்கச் சென்றாராம். அப்போது திடீரென நீரில் இழுத்துச் செல்லப்பட்டதில் மூச்சு திணறி உயிரிழந்தாா். கீழ சக்திகுளம் பகுதியில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டது.
சேரன்மகாதேவி போலீஸாா் அங்கு சென்று கணபதி சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.