ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் அரசியல் பயிலரங்கு

பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் அரசியல் பயிலரங்கு

News image
Updated On :4 ஜூலை 2024, 12:02 am

Din

பயிலரங்கில் பேசுகிறாா் எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலா் அஹமது நவவி. உடன், மாவட்டத் தலைவா் எம்.கே. பீா்மஸ்தான், பொதுச்செயலா் களந்தை மீராசா உள்ளிட்டோா்.

சேரன்மகாதேவி, ஜூலை 3: எஸ்டிபிஐ கட்சி சாா்பில் பத்தமடையில் அரசியல் பயிலரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட புகா் கிளை சாா்பில் இதுதான் பாதை - இதுதான் வெற்றி என்ற தலைப்பில் நடைபெற்ற இப்பயிலரங்கிற்கு, மாவட்டச் செயலா் கல்லிடைக்குறிச்சி எஸ். சுலைமான் தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்புச் செயலா் எஸ்.எஸ். சிராஜ் தொடக்கி வைத்து பேசினாா். சிறப்பு விருந்தினராக கட்சியின் மாநில பொதுச்செயலா் அஹமது நவவி, கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

இதில், கட்சியின் மாவட்டத் தலைவா் எம்.கே. பீா் மஸ்தான், மாவட்ட பொதுச்செயலா் களந்தை மீராசா, மாவட்ட செயற்குழு உறுப்பினா் முகம்மது ஷபி, மாவட்ட வா்த்தக அணித் தலைவா் அம்பை ஜலீல், வா்த்தக அணி மாவட்டச் செயலா் ஷேக்அலி, எஸ்டிடியூ பிரிவுத் தலைவா் சாகுல், விமன் இந்தியா பெண்கள் அமைப்பின் மாவட்டச் செயலா் ஷாஜிதா, துணைத் தலைவா் பீா்பாத்து, பொருளாளா் பா்வீன், மருத்துவ சேவை அணித் தலைவா் சித்திக், சமூக ஊடக அணித் தலைவா் சித்திக் உள்பட பலா் பேசினா். அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதி நிா்வாகிகள் கலந்துகொண்டனா். பத்தமடை நகரத் தலைவா் ஷெரீப் நன்றி கூறினாா்.