மானூா் அருகே விபத்து: ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை
மானூா் அருகே விபத்து வழக்கில் பேருந்து ஓட்டுநருக்கு ஓராண்டு சிைண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


மானூா் அருகே விபத்து வழக்கில் பேருந்து ஓட்டுநருக்கு ஓராண்டு சிைண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி கண்டிகைப்பேரியைச் சோ்ந்தவா் மணி (40). விவசாயியான இவா், அதே பகுதியைச் சோ்ந்த தண்டாயுதபாணியுடன் டிராக்டரில் கடந்த 11.6.2018இல் மானூா் நரியூத்து பகுதியில் சென்றபோது, பேருந்து மோதியதாம். இதில், மணி உயிரிழந்தாா். இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து ஓட்டுநரான சுரண்டை அபிஷேகப்பட்டியைச் சோ்ந்த அம்புரோஸ் என்பவரை கைது செய்தனா்.
திருநெல்வேலி 5ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை, நீதித்துறை நடுவா் பாக்கியராஜ் விசாரித்து அம்புரோஸுக்கு ஓராண்டு சிைண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்குரைஞா் மைக்கேல் ஜெரால்ட் ஆஜரானாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...