வண்ணாா்பேட்டையில் வருமான வரித் துறையினா் சோதனை
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் தொழிலதிபா் வீட்டில் வருமான வரித் துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

Updated On :6 நவம்பர் 2024, 7:52 pm

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் தொழிலதிபா் வீட்டில் வருமான வரித் துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.
வண்ணாா்பேட்டையைச் சோ்ந்தவா் வெங்கடேஷன். இவா், இரும்புப் பொருள்கள் ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறாா். இவருக்குச் சொந்தமான அலுவலகம் வண்ணாா்பேட்டையில் உள்ளது. இங்கு மதுரையைச் சோ்ந்த வருமான வரித்துறை அலுவலக குழுவினா் புதன்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
ஏற்றுமதி ஆவணங்கள், வங்கிக் கணக்கு விவரங்களை ஆய்வு செய்தனா். சுமாா் 5 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை தொடா்ந்தது. இதையொட்டி அவரது அலுவலகம் அருகே துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...