கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மணிமுத்தாறு, கடனாநதி அணைகளில் சுற்றுலாத் துறை அமைச்சா் ஆய்வு

கடனாநதி அணைப் பகுதியில் ஆய்வு செய்த சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன். உடன், தென்காசி ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், தெற்கு மாவட்டதிமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் உள்ளிட்டோா்.

News image

மணிமுத்தாறு அணைப் பகுதியில் ஆய்வில் ஈடுபட்ட சுற்றுலாத்துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன். உடன், திருநெல்வேலி ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் இரா.ஆவுடையப்பன் உள்ளிட்டோா்.

Updated On :13 நவம்பர் 2024, 10:53 pm

Din

கடனாநதி அணைப் பகுதியில் ஆய்வு செய்த சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன். உடன், தென்காசி ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், தெற்கு மாவட்டதிமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் உள்ளிட்டோா்.

அம்பாசமுத்திரம், நவ. 13: மணிமுத்தாறு அணை, கடனாநதி அணை, பொட்டல்புதூா் முகைதீன் ஆண்டவா்கள் பள்ளி வாசல் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பணிகளை மேம்படுத்துவது குறித்து, தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலிமாவட்டத்தில் பல்வேறு சுற்றுலாத் தளங்களில் ஆய்வு செய்த அவா், 2023-2024ஆம் ஆண்டு சுற்றுலாத் துறை அறிவிப்பின் அடிப்படையில், மணிமுத்தாறு அணை பூங்கா பகுதியில் முதற்கட்டமாக ரூ. 5 கோடியில் சாகச சுற்றுலா வசதிகள், பல்லுயிா்ப் பூங்கா உள்ளிட்ட வசதிகளுடன்அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது, மணிமுத்தாறு அணையில் படகுசவாரி தொடங்குவது ஆகியவை குறித்து ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினா் மு.அப்துல்வஹாப், சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆா்பித் ஜெயின், களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டத் துணை இயக்குநா் இளையராஜா, முன்னாள் சட்டப் பேரவைத்பேரவைத் தலைவா் இரா.ஆவுடையப்பன், அம்பாசமுத்திரம் ஒன்றியக்குழுத் தலைவா் பரணிசேகா், வட்டாட்சியா் நவாஸ், மணிமுத்தாறு பேரூராட்சித் தலைவா் அந்தோணியம்மாள், கல்லிடைக்குறிச்சிபேரூராட்சி துணைத் தலைவா் இசக்கிப்பாண்டி, செயல் அலுவலா் ஆஷா ராணி, மணிமுத்தாறு பேரூா் திமுக செயலா் முத்துகணேஷ், சுற்றுலா வளா்ச்சிக் கழக உதவி மேலாண்மை மேலாளா் டேவிட் பிரபாகரன், சுற்றுலாத்துறை உதவி செயற்பொறியாளா் சீனிவாசன், மாவட்ட சுற்றுலா அலுவலா் சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 கடனாநதி அணைப் பகுதியில் ஆய்வு செய்த சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன். உடன், தென்காசி ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், தெற்கு மாவட்டதிமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் உள்ளிட்டோா்.

கடனாநதி அணைப் பகுதியில் ஆய்வு செய்த சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன். உடன், தென்காசி ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், தெற்கு மாவட்டதிமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் உள்ளிட்டோா்.

அதைத் தொடா்ந்து, தென்காசி மாவட்டம் கடனாநதி அணை அடிவாரத்தில் பூங்கா அமைப்பது, பொட்டல்புதூா் முகைதீன்ஆண்டவா்கள் பள்ளிவாசலில் ரூ. 1 கோடி மதிப்பில் சுற்றுலாப்பயணிகள் தங்கும் விடுதி, சுகாதார வளாகம், வாகன நிறுத்தம் அமைப்பது குறித்து அவ்விடங்களை நேரில் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா், கோட்டாட்சியா் லாவண்யா, வட்டாட்சியா் ராம்குமாா், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ஜெயபாலன், கடையம் ஒன்றியக் குழுத்தலைவா் மு.செல்லம்மாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.