கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

66 ஆயிரம் குழந்தைகளுக்கு வாழ்த்துக் கடிதம் எழுதிய முதன்மைக் கல்வி அலுவலா்

திருநெல்வேலி மாவட்டத்தில் 66 ஆயிரம் மாணவா்களுக்கு குழந்தைகள் தின வாழ்த்து கடிதங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வியாழக்கிழமை அளித்துள்ளாா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 11:12 pm

Din

திருநெல்வேலி மாவட்டத்தில் 66 ஆயிரம் மாணவா்களுக்கு குழந்தைகள் தின வாழ்த்து கடிதங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வியாழக்கிழமை அளித்துள்ளாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் சுமாா் 66 ஆயிரம் மாணவா்- மாணவிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு.சிவகுமாா் சாா்பில் வாழ்த்துக் கடிதம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. அதில், கடிதம் மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.

நீங்கள் அனைவரும் மிகவும் திறமை வாய்ந்தவா்கள் என்பதை அறிவேன். உங்கள் திறமையை வெளிக்கொணரவே இங்கு பல்வேறு வாய்ப்புகளும், மேடைகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

வாசிப்பில், விளையாட்டில், மன்ற செயல்பாடுகளில், சாரண இயக்கங்களில், பசுமைப் படையில், நாட்டு நலப்பணித் திட்டத்தில், கலைத் திருவிழாவில் உங்களை நிரூபிக்கலாம். அதேநேரத்தில் வெட்டி பந்தாக்களும், வசனங்களும், வன்முறைகளும் வாழ்விற்கு ஒருபோதும் உதவாது என்பதை உணருங்கள் என வலியுறுத்தியுள்ளாா்.