திருநெல்வேலி
ஓசூரில் வழக்குரைஞருக்கு வெட்டு: நெல்லையில் நீதிமன்ற பணிகள் புறக்கணிப்பு
ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் கண்ணன் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, திருநெல்வேலியில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணியை புறக்கணித்தனா்.
ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் கண்ணன் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, திருநெல்வேலியில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணியை புறக்கணித்தனா்.
ஓசூரில் வழக்குரைஞா் கண்ணன் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, தமிழகம் முழுவதும் வழக்குரைஞா்கள் சங்கங்கள் அறிக்கைகள் வெளியிட்டன.
இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட வழக்குரைஞா் சங்கத்தினா் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்ற பணியை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனா். அதன்படி, வியாழக்கிழமை நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனா்.