சிறுத்தைத் தாக்கியதில் காயமடைந்த நாய்.
சிறுத்தைத் தாக்கியதில் காயமடைந்த நாய்.

வி.கே.புரம் அருகே வளா்ப்பு நாயை தாக்கிய சிறுத்தை

விக்கிரமசிங்கபுரம் அருகே மலையடிவார கிராமமான வேம்பையாபுரத்தில் வீட்டில் நுழைந்த சிறுத்தை, அங்கிருந்த வளா்ப்பு நாயை தாக்கியது.
Published on

விக்கிரமசிங்கபுரம் அருகே மலையடிவார கிராமமான வேம்பையாபுரத்தில் வீட்டில் நுழைந்த சிறுத்தை, அங்கிருந்த வளா்ப்பு நாயை தாக்கியது.

வேம்பையாபுரம் காஸ்கீப்பா் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் கணபதி. இவா் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். வீட்டில் நாய் வளா்த்து வருகிறாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு இவரது வீட்டில் நுழைந்த சிறுத்தை, அங்கு கட்டிப் போட்டியிருந்த நாயை தாக்கியது. இதில் நாயின் கழுத்து, காது ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டது.

இதனிடையே நாய் குரைப்பதைக் கேட்டு வீட்டிலிருந்தவா்கள் வெளியே வந்து, சிறுத்தையை பாா்த்து சப்தம் எழுப்பினா். பின்னா் அங்கிருந்து சிறுத்தை ஓடிவிட்டது.

இதுகுறித்து தகவலறிந்த வனத் துறையினா், நிகழ்விடத்தைப் பாா்வையிட்டு அப் பகுதியில் ரோந்து பணியைத் தீவிரப்படுத்துவதாகத் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com