திருநெல்வேலி
வள்ளியூா் முருகன் கோயிலில் மாற்றுத் திறனாளிகளுக்கு சாய்வு தளம் அமைப்பு
மாற்றுத் திறனாளிகள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக வள்ளியூா் அருள்மிகு முருகன் கோயிலில் சிமென்ட் சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக வள்ளியூா் அருள்மிகு முருகன் கோயிலில் சிமென்ட் சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்து கோயில்களில் மாற்றுத் திறனாளிகள் மூலவரை தரிசனம் செய்யும் வகையில் சிமென்ட் சாய்வு தளம் அமைத்து கொடுக்கவேண்டும் எ
ன்ற மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை ஏற்று அமைச்சா் பி.கே.சேகா்பாபு, தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்தாா். இதையடுத்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கோயில்களில் மாற்றுத் திறனாளிகள் தரிசனம் செய்ய வசதியாக சாய்வுதளம் அமைக்க உத்தரவிட்டாா்.
அதன்படி வள்ளியூா் முருகன் கோயிலில் மாற்றுத் திறனாளிகள் மூலவா் சந்நிதி வரை சென்று சுவாமி தரிசனம் செய்யும் வகையில் சிமென்ட் சாய்வு தளம் அமைக்கப்பட்டது.
இதையடுத்து அப்பகுதியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் மூலவரை தரிசனம் செய்து மகிழ்ச்சியடைந்தனா்.