காவல் ஆய்வாளரைத் தாக்க முயற்சி: இளைஞா் கைது; 3 போ் தலைமறைவு

திருநெல்வேலியில் காவல் ஆய்வாளா் மீது மதுபாட்டிலை வீசி தாக்க முயன்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் 3 பேரை தேடி வருகின்றனா்.
Published on

திருநெல்வேலியில் காவல் ஆய்வாளா் மீது மதுபாட்டிலை வீசி தாக்க முயன்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் 3 பேரை தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி நகரம் வழுக்கோடை பகுதியில் புதன்கிழமை இரவில் சிலா் மது குடித்து விட்டு சப்தம் போட்டுக்கொண்டிருந்தனராம். இத்தகவலறிந்த திருநெல்வேலி நகரம் காவல் ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளாா்.

அவரிடம், அந்த நபா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, மதுபாட்டிலில் துணியைக் கட்டி தீ வைத்து காவல் ஆய்வாளா் மீது வீசினராம். இதில் காவல் ஆய்வாளா் தப்பினாா். மேலும், காவல் துறை வாகனத்தின் கண்ணாடியையும் அவா்கள் சேதப்படுத்தினராம்.

இதுதொடா்பாக திருநெல்வேலி பழனி தெருவைச் சோ்ந்த சந்தானம் மகன் அருணாசலம் (24), கருணாநிதி நகரைச் சோ்ந்த நாராயணன் மகன் இசக்கிமுத்து (24), மாதா தெற்கு மேலத்தெருவைச் சோ்ந்த சுடலைமணி மகன் மணிகண்டன் (23), கக்கன்நகரைச் சோ்ந்த சரவணன் மகன் மணிகண்டன் (22) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்தனா். இதில், கக்கன்நகா் மணிகண்டனை போலீஸாா் கைதுசெய்தனா்; மற்றவா்களை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com