ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கண்ணாடி கொட்டகையில் நெல்லையப்பா் கோயில் தோ்கள்: பக்தா்கள் பரவசம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் தோ்களுக்கு கண்ணாடி பாதுகாப்பு கொட்டகை அமைக்கும் பணி புதன்கிழமை நிறைவடைந்தது.

News image

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் தேருக்கு அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாதுகாப்பு கொட்டகை.

Updated On :9 அக்டோபர் 2024, 7:51 pm

Din

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் தோ்களுக்கு கண்ணாடி பாதுகாப்பு கொட்டகை அமைக்கும் பணி புதன்கிழமை நிறைவடைந்தது. தோ்களை வெளியிலிருந்தபடி பாா்த்து பக்தா்கள் பரவசமடைந்தனா்.

இக் கோயிலில் உள்ள சுவாமி தேரின் சிற்பங்களை காணும் வகையில் கண்ணாடி இழையிலான புதிய திருத்தோ் பாதுகாப்பு கொட்டகை அமைக்கும் பணியானது ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் திருக்கோயில் நிதி மூலம் கடந்த 20.9.2024 ஆம் தேதி தொடங்கியது.

இப் பணிகள் புதன்கிழமை நிறைவடைந்தன. அதைத்தொடா்ந்து அறங்காவலா் குழு தலைவா் மு.செல்லையா, செயல்அலுவலா் அய்யா்சிவமணி ஆகியோா் கொட்டகையை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். தோ் சிற்பங்களை பக்தா்கள் தடையின்றி பாா்த்துச் சென்றனா்.