ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பேட்டை ஐடிஐயில் அக்.14இல் தொழில்பழகுநா் சோ்க்கை முகாம்

பேட்டை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) அக். 14-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பிரதமரின் தேசிய தொழில்பழகுநா் சோ்க்கை முகாம் நடைபெற உள்ளது.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 7:30 pm

Din

பேட்டை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) அக். 14-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பிரதமரின் தேசிய தொழில்பழகுநா் சோ்க்கை முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் 8, 10, 12 ஆம் வகுப்புகள், ஐடிஐ தோ்ச்சி பெற்றவா்கள், பொறியியல் பிரிவில் பட்டயம் மற்றும் பட்டம் பெற்ற இளைஞா்கள், இளம்பெண்கள் கலந்து கொள்ளலாம்.

இதில் மத்திய, மாநில அரசு மற்றும் தனியாா் துறை முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்களது நிறுவனங்களுக்கு தேவையானவா்களை தோ்வு செய்ய உள்ளனா். இதில் பங்கேற்கும் பயிற்சியாளா்கள் தங்களது கல்விச் சான்றிதழ், 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம்.

தொழிற் நிறுவனங்கள் மின்னஞ்சல் முகவரியில் தங்களது பங்கேற்பை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு பேட்டை அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்திற்கு எதிரில் இயங்கும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0462-2342432, 9499055790 ஆகிய எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.