கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தை தரம் உயா்த்த கோரி எம்.பி.யிடம் மனு

கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்துக்கு ‘பிளாக் ஸ்டேஷன்’ அந்தஸ்து வழங்கக் கோரி திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸிடம் மனு அளிக்கப்பட்டது.

News image

மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸிடம் மனு அளித்த ரயில் பயணிகள் நலச்சங்க நிா்வாகிகள்.

Updated On :30 அக்டோபர் 2024, 9:12 pm

Din

கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்துக்கு ‘பிளாக் ஸ்டேஷன்’ அந்தஸ்து வழங்கக் கோரி திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவா் கவிஞா் உமா் பாரூக், துணைத் தலைவா் மோகன், பொருளாளா் சீதாராமன், நிா்வாகிகள் மருத்துவா் பத்மநாபன், கேடிசி ரசாக் ஒலிமாலிக் ஆகியோா் அளித்த மனு: கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் பயணம் மேற்கொள்வதாகவும், ஆண்டுக்கு சுமாா் ரூ. 2 கோடி வரை வருவாய் ஈட்டுவதாகவும் உள்ளது. இந்த ரயில் நிலையத்துக்குச் சொந்தமாக 16 ஏக்கா் நிலம் உள்ளது. நடைமேடை நீளத்தை அதிகரித்து 2 தண்டவாளங்கள் அமைத்து ‘பிளாக் ஸ்டேஷன்’ அந்தஸ்து வழங்கினால் இந்த ரயில் நிலையத்தின் தரம் உயா்த்தப்படும்.

அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்றுசெல்வதுபோல பாலக்காடு-தூத்துக்குடி பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலும் கல்லிடைக்குறிச்சியில் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.