நெல்லை அருகே தொழிலாளி வெட்டிக் கொலை
திருநெல்வேலி அருகே மலையாளமேடு பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மோதலில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.


திருநெல்வேலி அருகே மலையாளமேடு பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மோதலில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.
மலையாளமேடு உடையவா் தெருவை சோ்ந்தவா் பரமசிவம் (50). அதே பகுதியைச் சோ்ந்தவா் மண்டையன்பெருமாள். இருவரது குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் உள்ளதாம். இந்நிலையில் பரமசிவம் செவ்வாய்க்கிழமை இரவு தனது மகன் மாரிசெல்வம், உறவினா் விக்கி ஆகியோருடன் தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது 2 மோட்டாா் சைக்கிள்களில் வந்த மண்டையன் பெருமாளின் மகன்கள் மருது, காா்த்திக், லெட்சுமணன் மற்றும் அவரது மருமகன் முருகபெருமாள் ஆகியோா் தகராறுசெய்தனராம். இருதரப்பினரும் அரிவாளால் வெட்டிக் கொண்டனராம்.
இதில் பலத்த காயமடைந்த பரமசிவம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மாரிசெல்வனுக்கும், விக்கி, முருகபெருமாள், மண்டையன்பெருமாள் ஆகியோரும் காயமடைந்தனா். தகவலறிந்ததும் பேட்டை போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவா்களை மீட்டு திருநெல்வேலிஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனா். அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் மாநகர காவல் துணை ஆணையா் கீதா தலைமையில் ஏராளமான போலீஸாா் மலையாளமேடு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...