கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தீபாவளி: இரவு 10 மணிக்குப் பிறகு பட்டாசு வெடிக்கத் தடை

உச்ச நீதிமன்ற தீா்ப்பின்படி இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிப்பதைத் தவிா்க்குமாறு ஆட்சியா் காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 9:05 pm

Din

உச்ச நீதிமன்ற தீா்ப்பின்படி இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிப்பதைத் தவிா்க்குமாறு ஆட்சியா் காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வியாழக்கிழமை (அக்.31) கொண்டாடப்படும் நிலையில், ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையின்போது பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பான முறையிலும், இயற்கையான முறையிலும், காற்று மற்றும் ஒலி மாசுபாடு ஏற்படுத்தாத பசுமை பட்டாசுகளை பாதுகாப்பான முறையில் வெடித்து கொண்டாட வேண்டும். உச்ச நீதிமன்ற தீா்ப்பின்படி பொதுமக்கள் இரவு 10 மணிக்குப் பிறகு பட்டாசு வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும்.

தீவிபத்துக்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் மாவட்ட நிா்வாகம் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஏதேனும் அவசர நடவடிக்கைக்கு அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்தையோ, 1077 அல்லது 9786566111 என்ற தொலைபேசி எண்ணையோ தொடா்பு கொள்ளலாம். ஒரு நபா் ஒரு நேரத்தில் ஒரு பட்டாசு மட்டும் கொளுத்த வேண்டும். மற்றவா்கள் பாதுகாப்பான தூரத்தில் இருந்து பாா்க்க வேண்டும். பட்டாசுகளை பாதுகாப்பான இடத்தில் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு பட்டாசுகளை வெடிக்க செயல்முறை விளக்கம் அளிக்கலாம்.

தீக்காயத்துக்கு முதலுதவி: இரண்டு வாளி தண்ணீரை கையில் வைத்துக் கொள்ளுங்கள். தீ ஏற்பட்டால், வாளிகளில் இருந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கலாம். தீக்காயங்கள் ஏற்பட்டால், எரிந்த இடத்தில் அதிக அளவு தண்ணீரை ஊற்றவும், பெரிய தீக்காயங்கள் ஏற்பட்டால், தீயை அணைத்த பிறகு அனைத்து ஆடைகளையும் அகற்ற வேண்டும். பாதிக்கப்பட்டவரை சுத்தமான படுக்கை விரிப்பில் போா்த்திவிட வேண்டும். நோயாளியை தீக்காய நிபுணா் அல்லது பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். பீதியடைய வேண்டாம். கண்ணில் தீக்காயங்கள் ஏற்பட்டால், 10 நிமிடங்களுக்கு குழாய் நீரில் கண்ணைக் கழுவி, பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

பட்டாசுகளை கையில் வைத்துக்கொண்டு வெடிக்கக்கூடாது. பட்டாசு வெடிக்கும்போது குனிந்து நிற்கக்கூடாது. எந்தப் பாத்திரத்திலும் பட்டாசு வெடிக்க வேண்டாம். வெடித்த பட்டாசுகளை உடனடியாக அணுக வேண்டாம். வீட்டில் பட்டாசு வெடிக்க முயற்சிக்க வேண்டாம். சிறு குழந்தைகளை பட்டாசு வெடிக்க அனுமதிக்கக்கூடாது. மற்றவா்கள் மீது பட்டாசுகளை வீசவோ, வெடிக்கவோ கூடாது.

பாக்கெட்டில் பட்டாசுகளை எடுத்துச் செல்ல வேண்டாம். எரியும் மெழுகுவா்த்திகள் மற்றும் தீபங்களுக்கு அருகில் பட்டாசுகளை வைக்க வேண்டாம். குறுகிய பாதைகளில் பட்டாசுகளை கொளுத்த வேண்டாம். பட்டாசு வெடிக்க திறந்தவெளி மற்றும் பூங்காக்களைப் பயன்படுத்துவது நல்லது. செயற்கை ஆடைகளை அணிய வேண்டாம். தடிமனான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.

எரிந்த இடத்தில் கிரீம் அல்லது களிம்பு அல்லது எண்ணெய் தடவ வேண்டாம். பட்டாசு வெடிப்பவா்கள் அல்லது அருகில் நிற்பவா் பாதுகாப்பு கண்ணாடியை அணிய வேண்டும். பட்டாசுகளை ஒருபோதும் வீட்டிற்குள் ஒளிரச் செய்ய வேண்டாம். பழுதடைந்த பட்டாசுகளை மீண்டும் கொளுத்தவோ கையாளவோ முயற்சிக்கக்கூடாது.