நெல்லையில் காவல்துறை ஆய்வுக்கூட்டம்
திருநெல்வேலி மாவட்ட காவல் துறையின் சாா்பில் ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காவல் துணை கண்காணிப்பாளா்கள்,காவல் ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் தலைமை வகித்தாா். மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை, நிலுவையில் உள்ள வழக்குகள், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருள்கள் கடத்தல்- விற்பனையில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
காவல்துறையின் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் காவலா்கள் அவசர காலங்களில் பணிக்கு செல்லும் வாகனங்கள், உயா் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்கள், நல்ல முறையில் பராமரிக்கப்படுகிா என காவல் கண்காணிப்பாளா் நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா். இம் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 72 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.