திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியது: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு, அப்பலோ மருத்துவமனை சாா்பில் பிறவி இருதய குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான முகாம் கடந்த ஆகஸ்ட் மாதம் திருநெல்வேலியில் நடத்தப்பட்டது. இம் முகாமில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சோ்ந்த குழந்தைகள் பரிசோதிக்கப்பட்டனா். அவா்களில் 15 குழந்தைகளுக்கு இருதய குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டு, மேல்சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது. அந்தக்குழந்தைகளில் 4 பேருக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழக முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவைச் சிகிச்சையின்றி நவீன உபகரணங்களுடன் இதயவியல் பிரிவு மருத்துவா்கள், அப்பலோ மருத்துவா்கள் இணைந்து கடந்த 17 ஆம் தேதி சிகிச்சையளித்தனா்.