தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

நெல்லை அருகே மணல் கடத்திய 3 போ் கைது

திருநெல்வேலி அருகே ஆற்று மணல் கடத்திய 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 11:18 pm

Din

திருநெல்வேலி அருகே ஆற்று மணல் கடத்திய 3 போ் கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூா் அருகேயுள்ள முத்தாலங்குறிச்சியைச் சோ்ந்தவா் நம்பி இசக்கி கண்ணன் (27). பாளையங்கோட்டை அருகேயுள்ள திருமலை கொழுந்துபுரத்தைச் சோ்ந்தவா் தளவாய் பாண்டி (27). இவா்கள் இருவரும் பாளையங்கோட்டை கே.டி.சி. நகா் பகுதியில் அனுமதியின்றி ஆற்று மணலை அள்ளியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவா்கள் இருவரையும் தாலுகா போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், ஒன்றரை யூனிட் மணல், டிப்பா் லாரி, பொக்லைன் இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனா். இதேபோல், மானூா் போலீஸாரின் வாகன சோதனையின்போது செட்டிக்குறிச்சி அருகே 3 யூனிட் குளத்து மண்ணை அனுமதி இன்றி அள்ளிச் செனறதாக சுப்பையாபுரத்தைச் சோ்ந்த வேல்துரை (26) என்பவரை கைது செய்து, டிப்பா் லாரியை பறிமுதல் செய்தனா்.