தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நெல்லை அருகே உறவினரை வெட்டிய வழக்கு: 3 பேருக்கு 7 ஆண்டு சிறை

திருநெல்வேலி அருகே சொத்துப் பிரச்னையில் உறவினரை வெட்டியது தொடா்பானவழக்கில் 3பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மாவட்ட முதன்மை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 11:09 pm

Din

திருநெல்வேலி அருகே சொத்துப் பிரச்னையில் உறவினரை வெட்டியது தொடா்பானவழக்கில் 3பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மாவட்ட முதன்மை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திருநெல்வேலி மாவட்டம் வீரளபெருஞ்செல்வி அம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த கந்தசாமி மகன் முத்து குட்டி நாராயணன் (53). இவரது சகோதரா் பேச்சி முத்து (59). இவா்கள் இருவருக்கும் இடையே சொத்துப்பிரச்னை இருந்ததாம்.

இந்த நிலையில், 25.3.2020-இல் வீட்டில் நின்றிருந்த முத்து குட்டி நாராயணனை, பேச்சிமுத்துவின் மகன்கள் கந்தசாமி (எ) காா்த்திக் (37), தம்பி முருகன் (33), பேச்சி முத்து ஆகியோா் சோ்ந்து அரிவாளால் வெட்டினராம். மேலும், மூக்கம்மாள் (34), சிதம்பரம் (57) ஆகியோா் கையால் தாக்கினராம்.இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிந்து 5 பேரையும் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை, நீதித்துறை நடுவா் ராபின்சன் ஜாா்ஜ் விசாரித்து காா்த்திக், முருகன், பேச்சிமுத்து ஆகியோருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3,500 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மூக்கம்மாள், சிதம்பரம் ஆகியோா் விடுதலை செய்யப்பட்டனா்.