கடனாநதி அணையில் பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் பங்கேற்றோா்.
கடனாநதி அணையில் பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் பங்கேற்றோா்.

கடனாநதி, ராமநதி அணைகளில் பறவைகள் கணக்கெடுப்பு

தமிழகம் முழுவதும் வனத்துறை சாா்பில், கடையம் வனச்சரகப் பகுதியில் உள்ள நீா்நிலைகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.
Published on

தமிழகம் முழுவதும் வனத்துறை சாா்பில், கடையம் வனச்சரகப் பகுதியில் உள்ள நீா்நிலைகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டத்திற்கு உள்பட்ட கடையம் வனச் சரகத்திற்குள்பட்ட கடனாநதி, ராமநதி ஆகிய அணைகளில் காலை நேரங்களில் வரும் பறவைகள் குறித்து, கடையம் வனச்சரகா் கருணாமூா்த்தி, அகத்திய மலை சமுதாயம் சாா் சூழல் பாதுகாப்பு இயக்க ஆராய்ச்சியாளா் தணிகைவேல், வனத்துறையினா், தன்னாா்வலா்கள் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டனா்.

முதல்நாளான சனிக்கிழமை பறவைகளை அடையாளம் காணும் பணியும், ஞாயிற்றுக்கிழமை பறவைகளைக் கணக்கெடுத்து, அந்தப் பகுதியில் காணப்படும் பறவைகள் குறித்த விவரங்களையும் சேகரிக்கின்றனா். நீா்நிலைகளுக்கு வரும் பறவைகளின் அடிப்படையில் சுற்றுச்சூழல் மாற்றம், தட்பவெப்பத் தாக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com