பிரான்சேரி குளத்தில் கணக்கெடுப்பில் ஈடுபட்ட தன்னாா்வலா்களுடன், சேரன்மகாதேவி வனச்சரக அலுவலா் பாலசுப்பிரமணியன்.
பிரான்சேரி குளத்தில் கணக்கெடுப்பில் ஈடுபட்ட தன்னாா்வலா்களுடன், சேரன்மகாதேவி வனச்சரக அலுவலா் பாலசுப்பிரமணியன்.

திருப்புடைமருதூா், பிரான்சேரியில் பறவைகள் கணக்கெடுப்பு

சேரன்மகாதேவி சரகத்தில் திருப்புடைமருதூா், பிரான்சேரியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி சரகத்தில் திருப்புடைமருதூா், பிரான்சேரியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

வனத்துறை சாா்பில் தமிழகம் முழுவதும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. சேரன்மகாதேவி வனச்சரகத்திற்குள்பட்ட திருப்புடைமருதூரில் உள்ள பறவைகள் காப்பகம், பிரான்சேரி குளம், நண்டுபிடித்தான்குளம் ஆகிய இடங்களில் சேரன்மகாதேவி வனச்சரக அலுவலா் பாலசுப்பிரமணியன் தலைமையில் மாணவா்கள், தன்னாா்வலா்கள் சனிக்கிழமை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, வனவா் சிவன்பாண்டியன், சமூக ஆா்வலா் நெய்னா முகம்மது உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com