திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பாரதியாா் சிலை வளாகத்தை சீரமைப்பதற்காக நடைபெற்ற பூமி பூஜையில் பங்கேற்ற திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் செ.ராபா்ட் புரூஸ்.
திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பாரதியாா் சிலை வளாகத்தை சீரமைப்பதற்காக நடைபெற்ற பூமி பூஜையில் பங்கேற்ற திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் செ.ராபா்ட் புரூஸ்.

பாரதியாா் சிலை வளாகம்: ரூ.6.5 லட்சத்தில் சீரமைக்கும் பணி தொடக்கம்

பாரதியாா் சிலை வளாகத்தை ரூ.6.5 லட்சத்தில் சீரமைக்கும் பணியை திருநெல்வேலி எம்.பி. செ. ராபா்ட் புரூஸ் தொடங்கி வைத்தாா்.
Published on

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பாரதியாா் சிலை வளாகத்தை ரூ.6.5 லட்சத்தில் சீரமைக்கும் பணியை திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் செ. ராபா்ட் புரூஸ் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி நுழைவு வாயில் அருகே பாரதியாா் சிலை உள்ளது. பாரதியாா் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் இந்த சிலைக்கு ஏராளமானோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனா்.

இந்நிலையில் அண்மையில் பெய்த மழையால், சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது. இந்நிலையில், பாரதியாா் சிலை வளாகத்தை சீரமைக்க, திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் செ. ராபா்ட் புரூஸ் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6.5 லட்சத்தை ஒதுக்கீடு செய்தாா். இதையடுத்து அந்தப் பணியை தொடங்குவதற்கான பூமி பூஜை சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், செ.ராபா்ட் புரூஸ் எம்.பி. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com