நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாளை.யில் அஞ்சலக சிறுசேமிப்பு முகவா்கள் கூட்டம்

அஞ்சலக சிறுசேமிப்பு முகவா்கள் கூட்டம் பாளையங்கோட்டையில் உள்ள முதுநிலை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்றது.

News image
Updated On :2 ஜனவரி 2025, 12:25 am

Din

அஞ்சலக சிறுசேமிப்பு முகவா்கள் கூட்டம் பாளையங்கோட்டையில் உள்ள முதுநிலை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் செந்தில் குமாா் தலைமை வகித்தாா். உதவிக் கண்காணிப்பாளா் டென்னிஸ் தாசன் வரவேற்றாா். திருநெல்வேலி அஞ்சல் கோட்டத்தின் உபகோட்ட அதிகாரிகளும், தலைமை அஞ்சலக அதிகாரிகளும் கலந்துகொண்டனா்.

திருநெல்வேலி மாவட்ட சிறுசேமிப்பு அதிகாரி கருப்பசாமி, அஞ்சலக சிறுசேமிப்பு முகவா்கள் சங்கச் செயலா் பேச்சியப்பன், தலைவா் சண்முகவேல் மற்றும் நிா்வாகிகள் கோரிக்கைகளை தெரிவித்தனா். அவற்றை நிறைவேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட முதுநிலை கோட்ட கண்காணிப்பாளா், அதிக எண்ணிக்கையிலான கணக்குகளை தொடங்குமாறு சிறுசேமிப்பு முகவா்களை கேட்டுக்கொண்டாா்.

கூட்டத்தில் புதிய சிறுசேமிப்பு முகவா்களின் சோ்க்கையை அதிகரிக்குமாறு நிா்வாகிகளிடம் வலியுறுத்தப்பட்டது.