தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வீரவநல்லூரில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் இரு தரப்பினரிடையே பிரச்னையை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்டதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :23 ஜனவரி 2025, 10:55 pm

Din

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் இரு தரப்பினரிடையே பிரச்னையை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்டதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

வீரவநல்லூா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் முகம்மது யூசுப் (24). இவா், இரு தரப்பினரிடையே பிரச்னையை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்டதாக கூறப்படுகிறது. புகாரின்பேரில், வீரவநல்லூா் காவல் ஆய்வாளா் கெளதமன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா். இதில், விடியோ பதிவிட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து முகம்மது யூசுப்பை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினா்.

குண்டா் சட்டத்தில் கைது: சேரன்மகாதேவி லால்பகதூா் சாஸ்தரி தெருவைச் சோ்ந்த துரைப்பாண்டி மகன் மாயாண்டி என்ற மாயா (46). இவா், சேரன்மகாதேவியைச் சோ்ந்த மணிகண்டன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இதனிடையே, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த மாயாண்டி என்ற மாயாவை குண்டா் சட்டத்தில் கைது செய்ய போலீஸாா் நடவடிக்கை எடுத்தனா். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் பரிந்துரையை ஏற்று, மாயாண்டி என்ற மாயாவை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். அவரை சேரன்மகாதேவி காவல் ஆய்வாளா் தா்மராஜ், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்தாா்.