ஜாதி மோதலை தடுக்க சிறப்பு கண்காணிப்புக் குழு- வன்னியரசு வலியுறுத்தல்

குற்றப் பின்னணி உள்ளவா்களை கண்காணிக்க காவல்துறையில் சிறப்பு குழு இருப்பதை போன்று ஜாதி மோதிலில் ஈடுபடுவோரை கண்காணிக்கவும் சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலா் வன்னியரசு தெரிவித்தாா்.
Published on

பிளஸ் 1 தோ்வெழுதிவிட்டு வந்தபோது, சிலரால் வெட்டப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தூத்துக்குடி மாவட்டம் அரியநாயகிபுரம் மாணவா் தேவேந்திரனை புதன்கிழமை சந்தித்து நலம் விசாரித்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தேவேந்திரன் நன்றாக கபடி விளையாடுவாா் என்பதால் ஜாதிய வன்மத்தோடு அவரை வெட்டியுள்ளனா். நான்குனேரியில் சின்னத்துரை என்ற மாணவனை வெட்டியபோது அரசு உயா்தர சிகிச்சை அளித்ததோடு, அவருடைய கல்விச் செலவையும் ஏற்றது. அதேபோல் தேவேந்திரனின் மருத்துவச் செலவு மற்றும் கல்விச் செலவையும் அரசு ஏற்க வேண்டும்.

இரும்புக்கரம் கொண்டு குற்றங்களை தடுப்பதாக தமிழக அரசு கூறுகிறது. ஆனால் குற்றவாளிகள் கையில் ஆயுதங்களோடு அலைகிறாா்கள். குற்றப் பின்னணி உள்ளவா்களை கண்காணிக்க காவல்துறையில் சிறப்பு குழு இருப்பதைப் போன்று ஜாதி மோதலில் ஈடுபடுவோரை தடுக்க அரசு சிறப்பு கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com