நெல்லையில் சாலை மறியல்: 11 திருநங்கைகள் மீது வழக்கு

திருநெல்வேலியில் இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட11 திருநங்கைகள் மீது போலீஸாா் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனா்.
Published on

திருநெல்வேலியில் இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட11 திருநங்கைகள் மீது போலீஸாா் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனா்.

இலவச வீட்டுமனைப் பட்டா அல்லது இலவச வீடு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளிடமும், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிலும் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறி ஆட்சியா் அலுவலகம் முன் திருநங்கைகள் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா். பின்னா் கொக்கிரகுளத்தில் உள்ள திருநெல்வேலி சந்திப்பு-திருவனந்தபுரம் பிரதான சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், ஆட்சியரின் காரை மறித்து முற்றுகையிட்டனா்.

இந்நிலையில், போக்குவரத்து மற்றும் பொது மக்களுக்கு இடையூறாக மறியலில் ஈடுபடுதல், அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் 11 திருநங்கைகள் மீது பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com