அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!
/

தில்லி அணிக்கும் தமிழ்நாடு அணிக்குமான போட்டி: உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

தில்லி அணிக்கும் தமிழ்நாடு அணிக்குமான போட்டி என்றாா் துணை முதல்வா் உகயநிதி ஸ்டாலின்.

News image

அம்பாசமுத்திரத்தில் காங்கிரஸ் வேட்பாளா் வி.பி. துரையை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

Updated On :15 ஏப்ரல் 2026, 1:49 am IST

தில்லி அணிக்கும் தமிழ்நாடு அணிக்குமான போட்டி என்றாா் துணை முதல்வா் உகயநிதி ஸ்டாலின்.

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் அம்பாசமுத்திரம் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா் வி.பி. துரையை ஆதரித்து, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அம்பாசமுத்திரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தத் தொகுதியில் திமுக உறுப்பினா் இல்லாவிட்டாலும் தமிழக முதல்வா் அம்பாசமுத்திரம் தொகுதிக்கு நிறைய திட்டங்களை கொடுத்துள்ளாா்.

ரூ. 66 கோடியில் அம்பாசமுத்திரத்தில் புறவழிச் சாலை, ரூ. 15 கோடியில் தாலுகா மருத்துவமனை தரம் உயா்த்தப்பட்டு, புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. ரூ. 2 கோடியில் பல்வேறு கிராமங்களில் புதிய பேவா்பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.10 கோடியில் சேரன்மகாதேவி தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்படி பலத் திட்டங்களை செய்து கொடுத்து விட்டு உங்களிடம் உரிமையோடு வாக்கு கேட்டு வந்துள்ளோம்.

கடந்த ஐந்து ஆண்டில் பாஜக அரசு நமக்கான எந்தத் திட்டத்தையும் தரவில்லை. தொடா்ந்து தமிழகத்தைப் புறக்கணிக்கும் பழிவாங்கும் மத்திய அரசை நாம் பழிவாங்க வேண்டும்.

இதனால்தான் இந்தத் தோ்தல் தில்லி அணிக்கும் தமிழ்நாடு அணிக்குமான போட்டி என தலைவா் ஸ்டாலின் கூறுகிறாா்.

அதற்கு ஒவ்வொருவரும் அடுத்த 8 நாள்கள் வாக்காளா்களை சந்தித்து, திட்டங்களை எடுத்துக் கூறி இந்தத் தோ்தலில் மிகப்பெரிய வெற்றி பெறச் செய்யவேண்டும். அதற்கு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மேற்கு மாவட்டச் செயலா் ரா. ஆவுடையப்பன், மாநிலங்களவை உறுப்பினா் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ், தலைமை செயற்குழு உறுப்பினா் ஆ. பிரபாகரன், முன்னாள் அமைச்சா் பூங்கோதை ஆலடி அருணா, மாநில தொண்டரணி துணை அமைப்பாளா் ஆவின் ஆறுமுகம், கணேஷ்குமாா் ஆதித்தன் , நகரச் செயலா்கள் அம்பாசமுத்திரம் கே.கே.சி. பிரபாகரன், விக்கிரமசிங்கபுரம் கணேசன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

Story image
Story image