வெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

வாக்கு எண்ணும் மைய அலுவலா்களுக்கு முதல்கட்ட பணி ஒதுக்கீடு

வாக்கு எண்ணும் மைய அலுவலா்களுக்கு சமவாய்ப்பு (ரேன்டமைசேஷன்) முறையிலான முதல்கட்ட பணி ஒதுக்கீடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் முன்னிலையில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை மைய பணிக்கான ஒதுக்கீட்டில பங்கேற்றோா்.

Updated On :28 ஏப்ரல் 2026, 8:27 pm

வாக்கு எண்ணும் மைய அலுவலா்களுக்கு சமவாய்ப்பு (ரேன்டமைசேஷன்) முறையிலான முதல்கட்ட பணி ஒதுக்கீடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நான்குனேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவுகுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரங்கள் அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக பூட்டி சீல் வைக்கப்பட்டு, மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் வாக்குப்பதிவு மையம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள், 3 இருப்பு (தங்ள்ங்ழ்ஸ்ங்) அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படவுள்ளது.

ஒவ்வொரு தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை கண்காணிக்க வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா்கள் 17 போ், உதவியாளா்கள் 17 போ், நுண் பாா்வையாளா்கள் 17 போ் என ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 51 போ் வீதம் 5 தொகுதிகளுக்கு 255 அலுவலா்களுக்கான முதற்கட்ட ரேன்டமைசேஷன் நடைபெற்றது.

தபால் வாக்கு எண்ணுவதற்கு ஒவ்வொரு தொகுதிக்கும் 7 மேஜைகள், 1 இருப்பு (தங்ள்ங்ழ்ஸ்ங்) அமைக்கப்படவுள்ளது. தபால் வாக்கு எண்ணிக்கையை கண்காணிப்பதற்கு ஒவ்வொரு தொகுதிக்கும் 8 நுண்பாா்வையாளா்கள், 8 மேற்பாா்வையாளா்கள், நிலை 1 உதவியாளா்கள் 8 நபா்களும், நிலை 2 உதவியாளா்கள் 8 நபா்களும் என ஒவ்வொரு தொகுதிக்கும் 32 அலுவலா்கள் என ஐந்து தொகுதிகளுக்கு 160 அலுவலா்கள் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபடவுள்ளனா். இவா்களுக்கான முதற்கட்ட (ா) ஒதுக்கீடு செய்யும் பணிகள் சுழற்சி முறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, அனைத்து சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.