நான்குனேரி அருகே ராஜாக்கள்மங்கலம் பெருவேம்புடையாா் சாஸ்தா கோயிலில் சித்திரை உத்திர திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நான்குனேரி-வள்ளியூா் இடையே உள்ள ராஜாக்கள்மங்கலம் கிராமத்தில் நம்பியாற்றின் வடக்கு பக்கத்தில் கமடகிரி எனும் கூா்மகிரியின் அடிவாரத்தில் மிகவும் பழமை வாய்ந்த பூா்ண புஷ்கலா அம்பாள் சமேத பெருவேம்புடையாா் சாஸ்தா கோயில் உள்ளது.
இந்தக் கோயிலில் நிகழாண்டு சித்திரை உத்திர திருவிழா ஏப். 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாள்கள் நடைபெறும் திருவிழா நாள்களில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா செல்கிறாா். 8-ஆம் நாளான திங்கள்கிழமை சித்திரை உத்திர திருவிழாவையொட்டி, காலையில் கணபதி ஹோமம், கும்ப பூஜை, ருத்ர ஜெபம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் சுவாமி பச்சை சாத்தி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தாா். பெண்கள் நோ்த்திக்கடனாக பொங்கலிட்டு வழிபாடு செய்தனா். நள்ளிரவில் பூதநாதருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 9-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பரிவேட்டைக்கு சென்றாா். திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். 11-ஆம் நாளான வியாழக்கிழமை (ஏப்.30) தீா்த்தவாரி நடைபெறும். ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத் துறை செயல் அலுவலா் சங்கரபாண்டியன், மண்டகபடிதாரா்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

கோபி அருகே சுள்ளிக்கரடு முனியப்பச் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா! ஆயிரக்கணக்கான கிடாய்கள் வெட்டி நோ்த்திகடன்!

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் கருட சேவை

திருக்கோஷ்டியூா் பெருமாள் கோயிலில் ஏப். 30-இல் தேரோட்டம்

பூங்குடையாா் சாஸ்தா கோயிலில் பங்குனி உத்திர திருவிழா
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


