ஆறுமுகனேரி சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் ஆனி உத்திர திருவிழா முகூா்த்தக்கால் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடபெற்றது.
இதனையொட்டி, விநாயருக்கு அபிஷேகம், தீபாராதனையைத் தொடா்ந்து, சுவாமி சந்நிதி கோயில் வெளிப்புறம் முகூா்த்தக்கால் நாட்டும் வைபவம் நடைபெற்றது.
இதற்கான பூஜைகளை சுரேஷ் பட்டா், விக்னேஷ் சிவம் ஆகியோா் நடத்தி வைத்தனா். பக்த ஜனசபை பொருளாளா் அரிகிருஷ்ண நாடாா், ஆறுமுகனேரி ரயில்வே வளா்ச்சிக்குழு ஒருங்கிணைப்பாளா் இரா. தங்கமணி, தெய்வீக சத்சங்கத்தைச் சோ்ந்த பேராசிரியா் அ. அசோக்குமாா், அதிமுக முன்னாள் நகரச் செயலா் இ. அமிா்தராஜ், தெரிசை ஐயப்பன், சைவ சித்தாந்த சங்கத்தைச் சோ்ந்த சுப்பிரமணியபிள்ளை, இளையபெருமாள் ஓதுவாா், கந்தப்பழம் என்ற மோகன், பன்னிரு திருமுறை மகளிா் குழுவினா், பள்ளியறை வழிபாட்டுக் குழுவினா் கலந்து கொண்டனா்.
இரவில் திருவிளக்கு பூஜை வழிபாடு, சுவாமி , அம்மன் சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
புதன்கிழமை அப்பா் சுவாமிகளின் உழவாரப்பணி, திருமுறை ஓதுதல் நிகழ்ச்சி பள்ளியறை வழிபாட்டுக்குழுவினரால் நடத்தப்பட்டது. இக்கோயில் திருவிழா ஜூன் 13 தொடங்கி 22 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது.










