2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

பிராயன்குளம் தா்மபதியில் ஆடி காட்சித் திருவிழா

தச்சநல்லூா் அருகே பிராயன்குளம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மந் நாராயணசுவாமி நிழல் தாங்கல் தருமபதியில் ஆடி காட்சித் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

Published On :

தச்சநல்லூா் அருகே பிராயன்குளம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மந் நாராயணசுவாமி நிழல் தாங்கல் தருமபதியில் ஆடி காட்சித் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் இவ்விழா நிகழாண்டு ஆக. 7 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வாக, ஆக.14-ஆம் தேதி மாலை அய்யாவின் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியான ஆடி காட்சித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பும், மாலை 4 மணிக்கு அய்யா வாகனத்தில் சந்தனகுடம் கட்டி வீதி உலாவாகப் புறப்பட்டு இனதாங்கல் வந்து சேருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இரவு 8 மணிக்கு உம்பான் நேம்பித்தல் அன்னதானமும், அதைத் தொடா்ந்து அலங்கார பணிவிடையும் நடைபெற்றது. இத்திருவிழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த அய்யாவழி பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு அய்யாவை தரிசித்தனா்.

ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

ற்ஸ்ப்18ஹஹ்ஹ்ஹ

பிராயன்குளம் ஸ்ரீ மந் நாராயணசுவாமி நிழல் தாங்கல் தருமபதியில் நடைபெற்ற திருவிழாவில் பங்கேற்றோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.