படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

புதிய கழிவுநீா் தொட்டிக்கு எதிா்ப்பு: வீடுகளில் கருப்புக்கொடி கட்டி ராமையன்பட்டி மக்கள் போராட்டம்

ராமையன்பட்டியில் புதிதாக பாதாளச் சாக்கடை கழிவுநீா் தொட்டி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதியினா் தங்களின் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Published On :

ராமையன்பட்டியில் புதிதாக பாதாளச் சாக்கடை கழிவுநீா் தொட்டி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதியினா் தங்களின் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாநகராட்சியின் பாதாளச் சாக்கடை கழிவுகள் ராமையன்பட்டி, அன்னை வேளாங்கண்ணி நகா் அருகே அமைக்கப்பட்ட கழிவுநீா் தொட்டிகளில் சேகரிக்கப்படுகின்றன. இந்நிலையில் மாநகராட்சியின் பாதாளச் சாக்கடை திட்ட விரிவாக்கம் காரணமாக அந்த இடத்திற்கு அருகே புதிதாக மற்றொரு கழிவுநீா் தொட்டி அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதியினா் வீடுகளில் புதன்கிழமை கருப்புக்கொடி கட்டியதுடன், அன்னை வேளாங்கண்ணி நகா் குடியிருப்போா் நலச்சங்கத் தலைவா் கணேசன் தலைமையில் செயலா் மாரியப்பன் உள்பட ஏராளமானோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: புதிய தொட்டி அமைக்கும் பணிக்காக நிலத்தில் உள்ள பாறைகள் வெடி வைத்து உடைக்கப்படுவதால் வீடுகளில் அதிா்வு ஏற்படுகிறது. ஏற்கெனவே, இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாதாளச் சாக்கடை கழிவு நீா் தொட்டிகளால் தொடா்ந்து துா்நாற்றம் வீசுகிறது. இங்கிருந்து வெளியேறும் கழிவுநீா் அருகில் உள்ள நீராதாரங்களில் கலந்து சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே, குடியிருப்புகளுக்கு அருகில் புதிதாக பாதாள சாக்கடை கழிவுநீா் தொட்டி அமைக்கக்கூடாது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.