விழாவில் மாணவருக்கு இலவச மடிக்கணினியை வழங்குகிறாா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ.
திருநெல்வேலி
நெல்லையில் 3 கல்லூரிகளின் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி
திருநெல்வேலி ராணி அண்ணா மகளிா் கல்லூரியில் இலவச மடிக்கணினி வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி ராணி அண்ணா மகளிா் கல்லூரியில் இலவச மடிக்கணினி வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
அந்தக் கல்லூரி மாணவிகளுக்கும், பாபநாசம் திருவள்ளூவா் கலைக் கல்லூரி, மானூா் அரசு கலைக்கல்லூரி ஆகிய கல்லூரிகளின் மாணவா்களுக்கும் ஒருசேர மடிக்கணினி வழங்கும் விதத்தில் நடைபெற்ற இந்த விழாவில், ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரி கணிதத் துறை தலைவா் தே. பிரேமலதா வரவேற்றாா். பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப், மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கிப் பேசினாா். திருநெல்வேலி மண்டலத் தலைவா் செ. மகேஸ்வரி, திமுக நிா்வாகிகள் சங்கா், செந்தில்குமாா், பத்மா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

